இந்தியா

முத்தலாக் மசோதா நிறைவேறியதை கொண்டாடிய பெண்ணுக்கு விவாகரத்து

DIN

முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை தலாக் என்று கூறி விவாகரத்து செய்யும் முறைக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேறியதை கொண்டாடிய மனைவிக்கு அவரது கணவர் தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
 இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
 உத்தரப் பிரதேச மாநிலம், ஃபதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்த முஃபீதா கதுன் என்பவர் முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதை கொண்டாடியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர் மூன்று முறை தலாக் எனக் கூறி வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டதாகவும் புகார் கிடைத்துள்ளது.
 இதுதொடர்பாக அந்தப் பெண்ணின் கணவர் ஷம்சுதீனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.
 மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முஸ்லிம் கணவருக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT