இந்தியா

வடகிழக்கு மாநிலங்களில் ரூ.3,000 கோடி மதிப்பிலான திட்டங்கள்

DIN

வடகிழக்கு மாநிலங்களில் ரூ.3,000 கோடி மதிப்பிலான 200 திட்டங்களை 100 நாள்களில் நிறைவேற்ற பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது என்று வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் கூறியதாவது: இத்திட்டத்தின்படி நாளொன்றுக்கு தலா ரூ.30 கோடி மதிப்பிலான திட்டங்கள் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதற்கு முன்பு புறக்கணிக்கப்பட்டுவந்த வடகிழக்கு மாநிலங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக அதிக முன்னுரிமை அளித்து வருகிறோம்.
 கடந்த 5 ஆண்டுகளில் 30 முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
 பிற மாநிலங்களுடன் வடகிழக்கு மாநிலங்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி, வடகிழக்கு மாநிலங்களுடன் பிற மாநிலங்களுக்கு அதிக நெருக்கத்தை ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டோம். அந்தப் பணி பாஜக தலைமையிலான புதிய அரசிலும் தொடர்கிறது.
 அஸ்ஸாம் மாநிலம், திமா ஹசாவ் மாவட்டத்தில் ரூ.50 கோடி செலவில் மூங்கில் பூங்கா அமைக்கும் திட்டமும் உள்ளது என்றார் ஜிதேந்திர சிங்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT