இந்தியா

காஷ்மீர் பிரச்சினையில் எதிர்ப்பா?: பதவியை ராஜிநாமா செய்த காங்கிரஸ் மாநிலங்களவை கொறடா 

DIN

புது தில்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தில் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், அக்கட்சியின் மாநிலங்களவை கொறடா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு மற்றும் 35A  பிரிவுகளை நீக்கும் மசோதாக்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்மசோதாவிற்கு அதிமுக, பகுஜன் சமாஜ், பிஜு ஜனதா தளம், சமாஜ்வாடி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவை தெரிவித்த நிலையில், காங்கிரஸ், திமுக மற்றும் காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன.

இந்நிலையில் இம்மசோதாவிற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், அக்கட்சியின் காங்கிரஸ் மாநிலங்களவை கொறடா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். 

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை கொறடா புவனேஸ்வர் கலிட்டா தனது ராஜிநாமா கடிதத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இது காங்கிரசுக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அவரது ராஜிநாமா ஏற்கப்படுவதாக  மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT