இந்தியா

சபாஷ் சரியான முடிவு: காஷ்மீர் விவகாரத்துக்கு அதிமுக அமோக வரவேற்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைக்கு அதிமுக அமோக வரவேற்பு தெரிவித்துள்ளது.

DIN


புது தில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைக்கு அதிமுக அமோக வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநிலங்களவையில், அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசுகையில்,  நாட்டின் இறையாண்மைக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எப்போதுமே முன்னுரிமை கொடுத்தார்.

370 சட்டப்பிரிவு என்பதே தற்காலிகமானதுதான். தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதன் மூலம் சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் முடிவால் கவலைப்பட ஒன்றும் இல்லை என்று அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதிமுகவைப் போலவே பகுஜன் சமாஜ் கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சி எம்.பி.க்களும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரம் நீ... அர்ச்சனா கௌதம்

சும்மா இரு மனமே... நந்திதா ஸ்வேதா!

நீலகிரி, கோவைக்கு நாளை(ஆக. 5) ரெட் அலர்ட்!

சப்தமின்றி தனிமையில்... கர்விதா சத்வானி

தமிழ்நாடுதான் இந்திய மின் வாகன உற்பத்தியின் Capital - முதல்வர் Stalin

SCROLL FOR NEXT