இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370-வது மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பாணை குடியரசுத் தலைவர் கையெழுத்துடன் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்படும். லடாக் யூனியன் பிரதேசம் சட்டப்பேரவை இல்லாததாகவும், ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையுடனும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இதனை அறிவித்தார். இதையடுத்து இவ்விரு மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில்10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT