இந்தியா

கேரளாவுக்குச் செல்வதாக இருந்தால்.. ஐக்கிய அரபு அமீரகம் அறிவுறுத்தல்

கேரளாவைச் சேர்ந்த அல்லது கேரளாவுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மக்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

PTI


துபை: கேரளாவைச் சேர்ந்த அல்லது கேரளாவுக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மக்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கேரளாவில் தற்போது கன மழை பெய்து, கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டு, 43 பேர் உயிரிழந்திருக்கின்றனர். எனவே, கேரளாவுக்குச் செல்வதாக இருந்தால் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும், வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்திய அதிகாரிகள், கேரளாவில் பெய்யும் மழை குறித்து வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தல்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து செல்லும் மக்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் வலியுறுத்தியுள்ளது.

பக்ரீத் பண்டிகையைக் கொண்டாட ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இருந்து கேரளா வர விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு, கொச்சி விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்பட்டிருப்பது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

SCROLL FOR NEXT