இந்தியா

நாகார்ஜுனா சாகர் அணையின் 24 மதகுகள் திறப்பு; இது அணையல்ல.. கடல்!

DIN


ஹைதராபாத்: மகாராஷ்டிராவில் பெய்து வரும் அதீத மழை காரணமாக நாகார்ஜுனா சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த நாகார்ஜுன சாகர் அணையின் 24 மதகுகளும் திறக்கப்பட்டுள்ளன. 

இன்று காலை 7 மணிக்கு அணையின் முதல் மதகு திறக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து மதகுகள் திறக்கப்பட்டு, காலை 10 மணியளவில் 10வது மதகு திறக்கப்பட்டது.

இந்த அணைக்கு வினாடிக்கு 8.25 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 5 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 560 அடியை தொட்டுள்ளது. அணையின் முழு நீர்மட்டம் 590 அடியாகும்.

இந்த அணையின் மொத்த நீர் கொள்ளளவு 312 டிஎம்சியாக உள்ள நிலையில், தற்போது 230 டிஎம்சி தண்ணீர் நிரம்பியுள்ளது.

நாகார்ஜுனா அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அதிக மதகுகள் திறக்கப்பட்டிருக்கிறது என்றால், பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஹைதராபாத் பகுதிக்கும் நாகார்ஜுனா அணையில் இருந்து தண்ணீர் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது: ராகுல் பகிர்ந்த விடியோ

தேவ கௌடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

அமுதூற்றினை ஒத்த இதழ்கள்! நிலவூறித் ததும்பும் விழிகள்!

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

SCROLL FOR NEXT