மகாராஷ்டிராவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பள்ளிக் குழந்தைகள் காயமடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம், பல்ஹார் மாவட்டத்தில் 49 பள்ளிக் குழந்தைகளுடன் வடா சாலையில் இன்று காலை பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது பெண் ஒருவர் குறுக்கே வரவே அவர் மீது மோதாமல் இருக்க பேருந்தை ஓட்டுநர் திருப்பியிருக்கிறார்.
இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 14 பள்ளிக் குழந்தைகள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.