இந்தியா

மாநிலங்களவைத் தேர்தல்: ராஜஸ்தானில் மன்மோகன் சிங் வேட்பு மனு

DIN


ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (86) ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக விமானம் மூலம் ஜெய்ப்பூர் வந்த அவர், மாநில சட்டப் பேரவைக்குச் சென்று தேர்தல் அதிகாரியிடம் தனது மனுவைத் தாக்கல் செய்தார். அவருடன் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட், மாநில அமைச்சர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் சென்றனர்.
மனுத் தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன் சிங், எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சிக்கும், ராஜஸ்தான் முதல்வர், துணை முதல்வர் இங்குள்ள நிர்வாகிகள், தொண்டர்கள், மாநில மக்கள் அனைவருக்கும் நன்றி. ராஜஸ்தான் மாநிலத்துக்காக ஆக்கப்பூர்வமான முறையில் மாநிலங்களவையில் பணியாற்றுவேன் என்றார்.
இது தொடர்பாக சச்சின் பைலட் கூறுகையில், மன்மோகன் மிக மூத்த அரசியல்வாதி மற்றும் பொருளாதார வல்லுநர். அவரது அனுபவம் ராஜஸ்தானுக்கு பல வழிகளில் உதவிகரமாக இருக்கும் என்றார்.
ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பாஜக மாநிலத் தலைவர் மதன் லால் சைனி கடந்த ஜூன் மாதம் காலமானார். அவர் கடந்த ஆண்டுதான் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்படிருந்தார் என்பதால், அங்கு மாநிலங்களவைக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்தது. இதற்கு முன்பு கடந்த 1991 முதல் 2019 வரை அஸ்ஸாமில் இருந்து தொடர்ந்து 5 முறை மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். 
இப்போது, அஸ்ஸாமில் இருந்து அவரை மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்பும் அளவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு அந்த மாநில சட்டப் பேரவையில் பலமில்லை. எனவே, இந்த முறை காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். ஆகஸ்ட் 26-ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்று, அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. போட்டி ஏதுமில்லையென்றால் தேர்தல் நடைபெறாது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT