இந்தியா

73ஆவது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

DIN

73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார். 

நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றார். பின்னர் பிரதமர் மோடி தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், வெளிநாட்டு பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

இதையடுத்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்தி வருகிறார். கடந்த 1998 முதல் 2003 வரை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தொடர்ந்து 6 முறை சுதந்திர தின உரையாற்றினார். இப்போது, பிரதமர் நரேந்திர மோடியும் சுதந்திர தின உரை நிகழ்த்துவது இது 6-ஆவது முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

SCROLL FOR NEXT