ஜம்மு-காஷ்மீரில் மொபைல்களுக்கான 2ஜி இணைய சேவை மீண்டும் சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவ்வகையில் பயங்கரவாதிகள் தவறாகப் பயன்படுத்தியதால், ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் அப்பகுதியில் இணைய சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு, சம்பா, கத்துவா, உதம்பூர், ரேஸி உள்ளிட்ட பகுதிகளில் மெபைல்களுக்கான 2ஜி இணைய சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. இதையடுத்து அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளும் விரைவில் வழங்கப்படும் என நேற்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் இயல்பு நிலை மீண்டும் திரும்பி வருகிறது. 144 தடை உத்தரவுகள் மெல்ல தளர்த்தப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்டவை வெள்ளிக்கிழமை முதல் வழக்கம்போல் இயங்க ஆளுநர் சத்தியபால் மாலிக் உத்தரவிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.