இந்தியா

உ,பியில் முதல்வர் யோகி தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம்? 

IANS

லக்னௌ: உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் திங்களன்று மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது இவரது அமைச்சரவையில் 43 அமைச்சர்கள் பதவி வகிக்கின்றனர். இவர்களில் 21 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், ஒன்பது பேர் தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்களாகவும் மற்றும் 13 பேர் இணை அமைச்சர்களாகவும் பணியாற்றுகின்றனர். 17 துறைகள் காலியாக உள்ளன

இந்நிலையில்  யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் திங்களன்று மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திங்கள் மாலை நடைபெற உள்ள விழாவில் புதிதாக ஆறு அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாகவும், அவர்களில் மேற்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அமைச்சரவையில் இடம்பிடிப்பார்கள் என்றும் தெரிகிறது.

இதுதொடர்பாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாநில பாஜக தலைவர் ஸ்வதிந்திர சிங் தேவ் ஆகிய இருவரும், வெள்ளியன்று பாஜக தேசிய செயல் தலைவர் நட்டாவை சந்தித்துப் பேசினார்கள். அதேபோல் சனிக்கிழமை மாலை மாநில ஆளுநர் ஆனநதிபென் படேலை முதல்வர் யோகி ஆதித்யநாத்  சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT