இந்தியா

ஹிமாசலில் கனமழையால் வெள்ளப் பெருக்கு: 22 பேர் பலி

DIN

ஹிமாசலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக 22 பேர் உயிரிழந்துவிட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

சிம்லாவில் உள்ள ஆர்டிஓ அலுவலகம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துவிட்டனர். மற்றொரு பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். இவர் பிகாரைச் சேர்ந்தவர் ஆவார். ஹட்கோடி கெஞ்சி பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலையில்  ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவரும், சஜ்வார் ஓடை பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவரும் உயிரிழந்தனர்.

மேலும் சிலர் நிலச்சரிவிலும், வெள்ளத்திலும் சிக்கி உயிரிழந்தனர். சிலரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

பண்டோ, நாத்பா அணைகள் முழுவதும் நிரம்பியதால் அவை திறந்துவிடப்பட்டன.

சிம்லா மாவட்டம் முழுவதும் மழை காரணமாக பலத்த சேதம் அடைந்துள்ளது. மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. சிம்லா-கால்கா இடையேயான ரயில் பாதை வழித்தடத்தில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால், ரயில் சேவை துண்டிக்கப்பட்டது. பிஸாஸ்பூர் மாவட்டம், நைனாதேவி நகரில் 360 மி.மீ. மழை பதிவானது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், சிம்லா உள்பட 4 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் 3 பேர் பலி: 

இதனிடையே, பஞ்சாப் மாநிலம், கன்னா நகரில் பலத்த மழை காரணமாக ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துவிட்டனர். குருதாஸ்பூர் மாவட்டத்தில் பியாஸ் நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 11 பேரை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ராணுவ வீரர்கள் மீட்டனர்.

ஒடிஸாவில் கடல் அரிப்பு: 

ஒடிஸா மாநிலம், கஞ்சாம் மாவட்டத்தில் கடல் அரிப்பு காரணமாக 27 வீடுகள் மண்ணில் புதைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேரலையில் சிக்கி 12க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT