இந்தியா

ப. சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுவை உடனடியாக விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வும் மறுப்பு

DIN


புது தில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்க  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு மறுத்துவிட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதி வி.என். ரமணா, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க மறுத்து, தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றிய நிலையில், முன் ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயும் மறுத்துவிட்டார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தற்போது அயோத்தி தொடர்பான வழக்கை விசாரித்து வருவதால், அவசர வழக்காக சிதம்பரத்தின் வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டது. எனவே, மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், மீண்டும் இதனை மதியம் 2 மணியளவில் தலைமை நீதிபதி அமர்வு முன் முறையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீது உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா மறுத்துவிட்டார். இதனால், சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி ப. சிதம்பரம் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் மேல்முறையீடு செய்தார்.

இன்று காலை உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா முன்னிலையில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, நேற்றிரவு கூட ப. சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறையும், சிபிஐ அதிகாரிகளும் முயற்சி செய்தனர் என்று கபில் சிபல் வாதத்தை முன் வைத்தார்.

வாதத்தைக் கேட்ட நீதிபதி ரமணா, ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மேல்முறையீட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்க மறுத்துவிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என்று அறிவித்தார்.

ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்விடம் தாக்கல் செய்யுமாறு நீதிபதி ரமணா உத்தரவிட்டார். இதையடுத்து ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வும் இந்த மனுவை உடனடியாக விசாரிக்க மறுத்துவிட்டது.

ப. சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறையும், சிபிஐ அதிகாரிகளும் தீவிரம் காட்டி வரும் நிலையில், அவருக்கு முன் ஜாமீன் கிடைப்பதில் மேலும் சிக்கல் நீடித்து வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT