இந்தியா

நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இஎஸ்ஐ மருத்துவமனைகள்: மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர்

DIN


நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தொழிலாளர் மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தின் (இஎஸ்ஐசி) மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் கட்டப்பட்ட இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைத் திறந்துவைக்கும் நிகழ்ச்சியும், புறநோயாளிகள் பிரிவுக்கான கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவும் புதன்கிழமை நடைபெற்றன. அதில் கலந்துகொண்டு கங்வார் பேசியதாவது:
நாடு முழுவதுமுள்ள 700 மாவட்டங்களில், சுமார் 400 மாவட்டங்களில் இஎஸ்ஐ மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மாவட்டங்களிலும் இந்த மருத்துவமனைகளை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. செகந்திராபாத் எம்.பி.யும் மத்திய உள்துறை இணையமைச்சருமான ஜி. கிஷண்குமார் ரெட்டி, ஹைதராபாதிலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் நவீன வசதிகளை ஏற்படுத்துமாறு நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். மருத்துவமனைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதர மத்திய அரசு தயாராக உள்ளது.
மருத்துவக் காப்பீட்டுக்கான தொழிலாளர்களின் பங்கீட்டை 4.75 சதவீதத்திலிருந்து 3.25 சதவீதமாக மத்திய அரசு குறைத்திருந்தபோதிலும், அதன் காரணமாக நிதிச் சுமை எதுவும் ஏற்படவில்லை. ஊதியங்கள் சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் நாட்டிலுள்ள 40 கோடி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உறுதி செய்யப்படும் என்றார் சந்தோஷ் குமார் கங்வார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜி. கிஷண்குமார் ரெட்டி கூறுகையில், மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தெலங்கானா மாநில அரசு இணைய வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT