இந்தியா

விசாரணைக்கு சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை: நீதிமன்றத்தில் சிபிஐ அடுக்கிய குற்றச்சாட்டுகள்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட ப. சிதம்பரத்தை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிபிஐ அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது.

ANI

புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட ப. சிதம்பரத்தை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிபிஐ அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது.

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சிபிஐ அதிகாரிகள் பல முக்கிய வாதங்களை முன் வைத்தனர்.

அதாவது, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் குற்றப்பத்திரிகையில்  ப. சிதம்பரத்தின் பெயரை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பான விசாரணையில் சிதம்பரம் போதிய ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. எந்தக் கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. வழக்கு தொடர்பான பல முக்கிய ஆதாரங்கள் அவர் வசம் உள்ளது. மௌனமாக இருப்பது அடிப்படை உரிமையாக இருக்கலாம் ஆனால், இவர் விசாரணையின் போது வாய்திறக்காமல் இருக்கிறார். 

ப. சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல் செய்ய உள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நடந்த சதியை வெளிக் கொண்டு வருவதற்கு சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். மேலும் சிதம்பரத்துக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் சிபிஐ தனது வாதத்தை முன் வைத்தது.

இதையடுத்து சிதம்பரம் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குமரி மாவட்டத்துக்கு மார்ச் 4, 10 உள்ளூர் விடுமுறை!

நல்லகண்ணு மறைவு: தவெக தலைவர் விஜய் இரங்கல்!

பத்மாவத் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு என்ன ஆனது? - குடும்பத்தினர் விளக்கம்!

தோல்வி எதிரொலி..! பாகிஸ்தான் கேப்டனின் குடும்பத்தை வசைபாடும் ரசிகர்கள்!

பாக்யராஜ் செய்த துரோகம்... கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்ராஜன்!

SCROLL FOR NEXT