இந்தியா

மத்திய ராணுவப் படைத்தளத்தின் போர்த்திறன் மேம்பட்டுள்ளது: ராஜ்நாத் சிங்

DIN


ராணுவத்தின் பிரிவுகளில் ஒன்றான மத்தியப் படைத்தளம் மற்றும் கோர்க்கா ரைஃபிள் பிரிவுகளின் போர்த்திறன் மேம்பட்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னெளவில் உள்ள மத்திய ராணுவப் படைத்தளத்தின் தலைமையகத்தை ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார். இது தொடர்பாக, ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்தியப் படைத்தளத்தின் போர்த்திறன் மேம்பட்டுள்ள விதம் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் விளக்கப்பட்டது. 
அது தொடர்பாக, அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். படைத் தளத்தில் உள்ள வீரர்களின் நலனுக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. அதற்கு அவர் தனது திருப்தியை வெளிப்படுத்தினார்.
கோர்க்கா ரைஃபிள் படையைச் சேர்ந்த 11 பிரிவுகளின் செயல்பாட்டை அவர் பார்வையிட்டார். அப்போது, பல்வேறு ராணுவப் பயிற்சிகளை படைவீரர்கள் செய்துகாட்டினர். இதையடுத்து, அவர்களுடன் ராஜ்நாத் சிங் உரையாடினார். 
பின்னர், போர் வீரர்களின் நினைவிடமான ஸ்மிரிதிகாவுக்குச் சென்று, அவர் அஞ்சலி செலுத்தினார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

SCROLL FOR NEXT