இந்தியா

உ.பி.: மாணவர்களைக் கடுமையாக தண்டித்த ஆசிரியர் பணிநீக்கம் 

DIN

உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடுமையான தண்டனை அளித்த காரணத்துக்காக ஆசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். மற்றொரு ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
 இதுதொடர்பாக அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:
 முசாஃபர்நகர் மாவட்டம், மோர்னா கிராமத்தில் உள்ள மகரிஷி சுக்தேவ் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் கடந்த 20-ஆம் தேதி பள்ளிக்கு காலம் தவறி வந்தனர். அதற்காக அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்களை பிரம்பால் கடுமையாக அடித்தனர். அதையடுத்து, அவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்கப்பட்டது.
 இந்தச் சம்பவம் தொடர்பான விடியோ காட்சி சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, அந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சஞ்சு செளதரி என்ற ஆசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருடன் பணியாற்றும் ரவி குமார் என்ற ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அந்தப் பள்ளி தலைமை ஆசிரியரின் பணிப் பதிவேட்டில் இதுதொடர்பாக புகார் வாக்கியம் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT