இந்தியா

திரைப்படமாகிறது வாஜ்பாய்-ன் வாழ்க்கை வரலாறு: பணிகள் துவக்கம் 

IANS

புது தில்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-ன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத்தலைவர்களில் ஒருவர் வாஜ்பாய். பாஜகவின் மூல அமைப்பான பாரதிய ஜன சங்கத்தை துவக்கியவர்களுள் ஒருவராகவும், அக்கட்சி சார்பாக முதன்முறையாக பிரதமரானவருமான அவர் உடல்நலக்குறைவால் கடந்த 16.08.2018 அன்று மரணமடைந்தார். அவரது வாழ்க்கை வரலாறானது "தி அன்டோல்ட்  வாஜ்பாய்" என்னும் பெயரில் என்.பி. உல்லேக் என்பவரால் புத்தகமாக எழுதப்பட்டு வெளியானது     

இந்நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்-ன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

ஷிவ ஷர்மா மற்றும் சீஷன் அஹமது ஆகியோருக்குச் சொந்தமான  'அமாஸ் பிலிம்ஸ்' என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமானது "தி அன்டோல்ட்  வாஜ்பாய்"  புத்தகத்தை திரைப்படமாக உருவாக்குவதற்கான உரிமையைப் பெற்றுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம்  பேசிய ஷர்மா, 'இத்தகைய அதிகம் பேசப்படாத கதாநாயகன் ஒருவரது வாழ்வை திரையில் கொண்டு வருவதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெரிய கவுரமாகவும் உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

படத்திற்கான திரைக்தை உருவாக்கப் பணிகள் தொடங்கி விட்டதாகவும், பணிகள் நிறைவடைந்தவுடன் இயக்குநர் மற்றும் நடிக நடிகையர் தேர்வு நடைபெறும் என்றும், படத்திற்கு அநேகமாக "தி அன்டோல்ட்  வாஜ்பாய்"  என்பதே பேராக இருக்கும் என்றும் அஹமது தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT