இந்தியா

சிதம்பரத்தைக் கைது செய்ய அமலாக்கத் துறைக்கு விதிக்கப்பட்ட தடை நாளை வரை நீட்டிப்பு

DIN


புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தைக் கைது செய்ய அமலாக்கத் துறைக்கு விதிக்கப்பட்ட தடை நாளை காலை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறைக்கு எதிராக சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை நாளை காலை 11.30 மணி வரை ஒத்திவைத்தும், சிதம்பரத்தை நாளை காலை வரை கைது செய்ய தடை விதித்தும் உத்தரவிட்டது.

முன்னதாக விசாரணையின் போது, சிதம்பரத்தை கைது செய்தது பழிவாங்கும் செயலோ, வேட்டையாடுதலோ அல்ல. வலுவான ஆதாரங்கள் இருப்பதால்தான் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார் என்று அமலாக்கத் துறை வாதங்களை முன் வைத்தது.  மேலும், தனது வாதத்தை நாளை முடித்துக் கொள்வதாகவும் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT