புது தில்லி: ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியின் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நாளை லடாக் செல்கிறார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு லடாக் பகுதிக்கு செல்வது இதுவே முதல்முறையாகும்.
இந்தப் பயணத்தின்போது லடாக் பகுதி மக்களையும், அங்குள்ள முக்கிய நபா்களையும் சந்திக்கும் ராஜ்நாத் சிங், அந்தப் பிராந்தியத்தை யூனியன் பிரதேசமாக மாற்றும் முடிவு குறித்தும்உரையாட இருப்பதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.