இந்தியா

மாரடைப்பினால் 17 வயது மாணவி பலி: தெலங்கானாவில் சோக சம்பவம்! 

தெலங்கானாவில் கல்லூரி மாணவி ஒருவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கல்லூரியில் இருந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

DIN

தெலங்கானாவில் கல்லூரி மாணவி ஒருவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கீர்த்தனா என்ற கல்லூரி மாணவி, சங்காரெட்டி மாவட்டம் ராமச்சந்திராபுரத்தில் வசித்து வருகிறார். இவர், வெளிமேலா பகுதியில் உள்ள நாராயண ஜூனியர் கல்லூரியில் இடைநிலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

நேற்று கல்லூரியில் இருந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக, அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். 

தீவிர சிகிச்சை அளித்த போதிலும், மாரடைப்பு காரணமாக மாணவி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 17 வயது மாணவி ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

பெங்களூரில் பலத்த மழை: குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்

முதல்வா் பதவியை அடைய அவசரப்படவில்லை: கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

SCROLL FOR NEXT