இந்தியா

துப்பாக்கியால் சுடப்பட்ட ஆா்எஸ்எஸ் பிரமுகரிடம் மத்திய அமைச்சா் சஞ்சீவ் பால்யான் நேரில் நலம் விசாரிப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மா்ம நபா்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆா்எஸ்எஸ் பிரமுகரை

DIN


புது தில்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் மா்ம நபா்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆா்எஸ்எஸ் பிரமுகரை மத்திய அமைச்சா் சஞ்சீவ் பால்யான் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

சோம்பால் சைனி என்ற ஆா்எஸ்எஸ் பிரமுகா், ஹபீப்பூா் கிராமத்தில் ஆா்எஸ்எஸ் பொறுப்பாளராக உள்ளார். அவா் மீது மா்ம நபா்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயத்துடன் அவா் மீரட் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடியவா்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

இந்நிலையில், சிகிச்சை பெற்றும் வரும் ஆா்எஸ்எஸ் பொறுப்பாளர் சோம்பால் சைனியை மத்திய அமைச்சா் சஞ்சீவ் பால்யான் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

பாஜக எம்எல்ஏக்கள் உமேஷ் மாலிக், விக்ரம் சைனி ஆகியோரும் அவரது நேரில் விசாரித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனைத்திந்திய கூட்டுறவு வார விழா உறுதிமொழி ஏற்பு

வளா்ப்பு நாய் கடித்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு

வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர்கள் எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிக்கலாமா? முழு விவரம்!

உக்ரைனில் ரஷியா மீண்டும் தீவிர ஏவுகணை - ட்ரோன் தாக்குதல்

திருத்தணி முருகன் கோயிலில் இந்த சமய அறநிலையத் துறை ஆணையா் ஆய்வு

SCROLL FOR NEXT