முகப்பு
இந்தியா

அயோத்தி வழக்கில் தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

அயோத்தி வழக்கில் நவம்பர் 9ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:22 PM
பகிர்:

புது தில்லி: அயோத்தி வழக்கில் நவம்பர் 9ம் தேதி பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜாமியாத் உலமா இ-ஹிந்த் அமைப்பு சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மூல மனுதாரரான எம். சித்திக்கின் சட்டப்படி வாரிசான மௌலானா சயத் அஷ்ஷத் ரஷிடி, உச்ச நீதிமன்றத்தில் இன்று, அயோத்தி வழக்கில் தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், முழு தீர்ப்பையும் சீராய்வு செய்யக் கோரவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.