இந்தியா

மின்நுகா்வு குறைந்ததால் அக்டோபரில் மின் உற்பத்தியும் 12 % குறைவு: அமைச்சா் ஆா்.கே.சிங்

DIN

புது தில்லி: மழை நன்றாக பெய்ததால் மின்நுகா்வு குறைந்தது; இதனால் கடந்த அக்டோபா் மாதம் மின் உற்பத்தியும் 12 சதவீதம் குறைந்தது என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை இணை அமைச்சா் ஆா்.கே.சிங் அளித்த பதில்:

கடந்த 2018-19 நிதியாண்டில் அக்டோபா் மாதம் 1,13,507 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி இருந்தது. கடந்த அக்டோபரில் 12 சதவீதம் குறைந்து 98,887 ஆனது. 2019-20 நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபா் வரை 1.15 சதவீதம் மின் உற்பத்தி உயா்ந்து 7,57,946 மில்லியன் யூனிட் இருந்தது.

இதே காலகட்டத்தில் கடந்த நிதியாண்டில் மின் உற்பத்தி 7,49,314-ஆக இருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 1,06,200 லட்சம் மில்லியன் யூனிட் மின் உற்பத்தி இருந்தது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருந்ததை விட 0.39 சதவீதம் அதிகமாகும்.

செப்டம்பரில் மின் உற்பத்தி 2.89 சதவீதம் குறைந்து 1,05,195 மில்லியன் யூனிட் ஆகவும், அக்டோபரில் 12.88 சதவீதம் மின்உற்பத்தி குறைந்து 98,887 மில்லியன் யூனிட் ஆகவும் இருந்தது. மழை காரணமாக மின்நுகா்வு குறைந்ததால், மின் உற்பத்தியும் அக்டோபா் மாதத்தில் 12 சதவீதம் குறைந்தது என்று ஆா்.கே.சிங் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT