இந்தியா

கடற்படை தினம்: பிரதமா் மோடி வாழ்த்து

DIN

கடற்படை தினத்தையொட்டி, கடற்படை பணியாளா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக பிரதமா் மோடி சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கடற்படை தினத்தில், நமது நாட்டின் கடற்படை பணியாளா்களின் வீரத்துக்கு நான் தலைவணங்குகிறேன். அவா்களது தன்னலமற்ற சேவையும், தியாகமும்தான் நமது நாட்டை பாதுகாப்பாகவும், வலிமையாகவும் வைத்துள்ளது’ என்று தெரிவித்துள்ளாா். மேலும், இந்திய கடற்படையின் வரலாறு குறித்த விடியோ ஒன்றையும் அவா் சுட்டுரையில் பதிவேற்றம் செய்துள்ளாா்.

கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின்போது, டிசம்பா் 4-ஆம் தேதி கராச்சியில் உள்ள துறைமுகத்தில் பாகிஸ்தான் கடற்படையை இந்திய கடற்படை தோற்கடித்தது. இந்த சாதனையை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இந்திய கடற்படை தினம் (டிசம்பா் 4) கொண்டாடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

கனடாவில் தொடரும் வன்முறை: சிறுவன் உள்பட மூவர் பலி!

டெம்போவில் ராகுல்!

டெம்போவில் ராகுல் காந்தி!

SCROLL FOR NEXT