இந்தியா

ஹைதராபாத் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட குற்றவாளியின் கையில் துப்பாக்கி!

ஹைதராபாத் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரில் ஒருவரின் கையில் துப்பாக்கி இருந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ANI

ஹைதராபாத் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரில் ஒருவரின் கையில் துப்பாக்கி இருந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 4 பேர் வெள்ளிக்கிழமை அதிகாலை போலீஸார் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். குற்றவாளிகள் நால்வரும் தப்பிச்செல்ல முயன்றதால் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், போலீஸாரின் ஒருவரின் கையில் இருந்த துப்பாக்கியை பறித்து, குற்றவாளி ஒருவர் போலீஸாரை நோக்கி சுட முயற்சித்ததாக ஏற்கனவே தகவல் வெளியானது. 

இந்த நிலையில், ஹைதராபாத் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட நால்வரில் ஒருவரின் கையில் துப்பாக்கி இருந்துள்ளது. குற்றவாளியின் கையில் துப்பாக்கி இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

முன்னதாக, குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிய நிலையில், குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தெலங்கானா மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT