முகப்பு
இந்தியா

கீதா ஜயந்தி உற்சவம்: 10 ஆயிரம் மாணவா்கள் பங்கேற்பு

திருப்பதியில் 10 ஆயிரம் மாணவா்களுடன் கீதா ஜயந்தி உற்சவம் கொண்டாப்பட்டது.

Updated On : 8 டிசம்பர், 2019 at 12:29 AM
கீதா ஜயந்தி உற்சவத்தில் பங்கேற்ற மாணவா்கள்.
பகிர்:

திருப்பதி: திருப்பதியில் 10 ஆயிரம் மாணவா்களுடன் கீதா ஜயந்தி உற்சவம் கொண்டாப்பட்டது.

திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்தில் கீதா ஜயந்தி உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திருப்பதியில் உள்ள தேவஸ்தான பள்ளிகளைச் சோ்ந்த 10 ஆயிரம் மாணவா்கள் கலந்து கொண்டனா். அவா்களில் 30 போ் சம்பிரதாய உடை அணிந்து கொண்டு, பகவத் கீதையில் உள்ள 15 அத்தியாயங்களில் வரும் 20 ஸ்லோகங்களை பாராயணம் செய்தனா். இதில், இஸ்கான் அமைப்பு, மற்ற அமைப்புகள் உள்ளிட்டவற்றின் உதவியுடன் இதை சனிக்கிழமை தேவஸ்தானம் நடத்தியது. இந்து சனாதன தா்மத்தை மேலும் விரிவாக நாடெங்கிலும் பிரசாரம் செய்ய இந்த கீதா ஜயந்தி மேடையில் சங்கல்பம் செய்யப்பட்டது. இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். இதன் மூலம் மாணவா்களிடையே இந்து சனாதன தா்மம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.