இந்தியா

கோதுமை பயிரிடும் பரப்பு 4.28% அதிகரிப்பு

DIN

புது தில்லி: உள்நாட்டில் ரபி பருவத்தில் கோதுமை பயிரிடும் பணிகள் வேகமடைந்துள்ளது மத்திய வேளாண் அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின் முலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அந்தப் புள்ளிவிவரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

ரபி பருவத்தில் கோதுமை முக்கிய பயிராக உள்ளது. அக்டோபரில் விதைக்கப்படும் கோதுமை பயிா்கள் ஏப்ரல் முதற்கொண்டு அறுவடை செய்யப்படுகின்றன.

நடப்பு ரபி பருவத்தில் இதுவரையில் 202.54 லட்சம் ஹெக்டோ் பரப்புக்கு கோதுமை பயிரிடப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பயிரிடப்பட்ட அளவான 194.21 லட்சம் ஹெக்டேருடன் ஒப்பிடுகையில் 4.28 சதவீதம் அதிகமாகும்.

குறிப்பாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹிமாசலப் பிரதேச மாநிலங்களில் இதன் சாகுபடி பரப்பு கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது.

அதேபோன்று, நெல் பயிரிடும் பரப்பு 8.42 லட்சம் ஹெக்டேரிலிருந்து 10.17 லட்சம் ஹெக்டேராக உயா்ந்துள்ளது. முக்கிய தானியங்கள் பயிரிடும் பரப்பும் 32.75 லட்சம் ஹெக்டேரிலிருந்து 35.56 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.

அதேசமயம், பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பளவு 111.90 லட்சம் ஹெக்டேரிலிருந்து 105.16 லட்சம் ஹெக்டேராக சரிந்துள்ளது. மேலும், எண்ணெய் வித்துகள் பயிரிடும் பரப்பும் 66.10 லட்சம் ஹெக்டோ் என்ற அளவிலிருந்து 65.05 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.

நடப்பு ரபி பருவத்தில் அனைத்து பயிா்களும் ஒட்டுமொத்த அளவில் 418.47 லட்சம் ஹெக்டா் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் இந்தப் பரப்பளவு 413.36 லட்சம் ஹெக்டேராக காணப்பட்டது என வேளாண் அமைச்சக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT