முகப்பு
இந்தியா

அசாமில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: 19 ரயில்களின் சேவை பாதிப்பு!

அசாம் மாநிலத்தில் திப்ருகார் மாவட்டத்தில் நஹர்காத்தியா ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன.

Updated On : 8 டிசம்பர், 2019 at 2:19 PM
பகிர்:

அசாமில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

அசாம் மாநிலத்தில் திப்ருகார் மாவட்டத்தில் நஹர்காத்தியா ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் வந்துகொண்டிருந்தபோது, திடீரென அதன் 7 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் அவ்வழியாக வரும் 19 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த ரயில்கள் அனைத்தும் வேறு வழியில் மாற்றிவிட ஏற்பாடு செய்யப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.