தில்லி தீவிபத்தில் சிக்கியவர்களில் பலர் குழந்தைகள்!
தில்லி தொழிற்சாலை தீ விபத்தில் சிக்கியவர்களில் பலர் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் என தெரிய வந்துள்ளது.
இந்தியாதில்லி தீவிபத்தில் சிக்கியவர்களில் பலர் குழந்தைகள்!
தில்லி தொழிற்சாலை தீ விபத்தில் சிக்கியவர்களில் பலர் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் என தெரிய வந்துள்ளது.
தில்லி தொழிற்சாலை தீ விபத்தில் சிக்கியவர்களில் பலர் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் என தெரிய வந்துள்ளது.
வடக்கு தில்லியில் உள்ள பரபரப்பான ராணி ஜான்சி சாலையில் அனாஜ் மண்டி எனும் குடியிருப்புகள் உள்ள பகுதியில் இயங்கி வந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் இதுவரை 43 போ் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதே தொழிற்சாலையில் மீண்டும் ஒரு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 43 பேர் உயிரிழந்த நிலையில், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மின்கசிவினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், தொழிற்சாலை தேவையான பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கவில்லை என்பதும் விபத்துக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், விபத்தில் சிக்கியவர்களில் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களும் இருப்பது தெரிய வந்துள்ளது.
தில்லி லேடி ஹார்டிங்கே மருத்துவக் கல்லூரிக்கு 13 வயது சிறுவனின் உடல் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்பின்னரே அந்த சிறுவன் தில்லி அனாஜ் மண்டி தீ விபத்தில் உயிரிழந்தவன் என்று தெரிந்தது. அவரது உறவினர் ஒருவர் இதனை உறுதி செய்தார். மேலும், உயிரிழந்த சிறுவனின் சகோதரனும்(14 வயது) அதே தொழிற்சாலையில்தான் பணிபுரிவதாகவும், அவனைக் காணவில்லை என்றும் அவனும் தீ விபத்தில் சிக்கியுள்ளனா? எனத் தெரியவில்லை என்றும் போலீசாரிடம் கூறியுள்ளார்.
அதேபோன்று மற்றொரு நபரும், தனக்கு வேண்டிய இரண்டு சிறுவர்களை தேடுவதாக கூறியுள்ளார். அவர்கள் இருவருமே, கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.
சமஸ்திபூரில் வசித்து வரும் ஒருவர், தனது உறவினரின் மகன் ஒருவர் தில்லி தீ விபத்தில் சிக்கி, காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார்.
இதேபோன்று, தில்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பலர் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை தொழிற்சாலையில் வேலைக்கு வைக்கக்கூடாது என்று சட்டம் அமலில் இருக்கும் நிலையிலும், சட்டவிரோதமாக சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் செங்கர் பேசும்போது, 'இரண்டு வாரங்களுக்கு முன்புதான், சிதிபுராவில் இதே தொழிற்சாலை பிரிவில் இருந்து 45 குழந்தைகளை நாங்கள் மீட்டோம். குறைந்த ஊதியத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்' என்று தெரிவித்தார்.
மேலும், '14 வயதிற்கு குறைவான எந்தக் குழந்தையையும் சட்டப்பூர்வமாக வேலைக்கு அமர்த்தக்கூடாது. அதற்கான விதிமுறைகள் உள்ளன. ஆனால், அதை யாரும் பின்பற்றவில்லை' என்றும் கூறினார்.
2011 இல் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தில்லியில் 49,000 குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.