இந்தியா

அயோத்தி வழக்கில் மறுஆய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

DIN


அயோத்தி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மறுஆய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக இருந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தரப்பில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மசூதி கட்டிக் கொள்ள உத்தரப் பிரதேசத்தில் 5 ஏக்கர் நிலத்தை இஸ்லாமிய அமைப்புக்கு வழங்குமாறும் அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இந்த நிலையில், இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மறுஆய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு இன்று உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT