மெட்ரோ ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை!
தில்லி மெட்ரோ ரயில் முன் பாய்ந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
தில்லி மெட்ரோ ரயில் முன் பாய்ந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
தில்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று உள்ளே வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கிருந்த வாலிபர் ஒருவர் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இறந்தவரது பெயர் பாரத்(33) என்றும் இன்று காலை 11.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தினால் மெட்ரோ வயலட் லைனில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன. ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இருந்து காஷ்மீரி கேட் வரை சில மணி நேரங்கள் மெட்ரோ சேவையில் தாமதம் ஏற்பட்டதாகவும் தற்போது அப்பகுதியில் நிலைமை சீரடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement