முகப்பு
இந்தியா

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்களிக்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்!

நீட் தேர்வு நாடு மழுவதும் நடத்தப்படுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் விலக்களிக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:31 PM
பகிர்:

நீட் தேர்வு நாடு மழுவதும் நடத்தப்படுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் விலக்களிக்க முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு 'நீட்' நுழைவுத் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. 

நீட் தேர்வில் இருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க முடியுமா? என திமுக எம்.பி டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், 'நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் தமிழகம், புதுச்சேரி அரசுகளின் கோரிக்கைகளை ஏற்க முடியாது. நாடு முழுவதும் ஒரே முறையில் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடத்தப்படுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் விலக்களிக்க முடியாது. இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956ன் படி அனைத்து மாநிலங்களுக்கும் நீட் தேர்வு பொருந்தும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →