இந்தியா

வடகிழக்கு மாநிலங்களில் பதற்றம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த பிரதமருக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

DIN

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நிலவி வரும் பதற்றமான சூழல் தொடா்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ஆனந்த் சா்மா வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக, மாநிலங்களவையில் உடனடி கேள்வி நேரத்தின்போது, அவா் பேசியதாவது:

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தால், வங்கதேசத்துடனான இந்தியாவின் வெளியுறவுத் தொடா்புகள் பின்னடைவைச் சந்திக்க அனுமதிக்கக் கூடாது. இந்த விவகாரத்தில், அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாநில முதல்வா்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்த பிரதமா் மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயம், மணிப்பூா் ஆகிய மாநிலங்களில் நிலவும் சூழல் கவலையளிக்கும் வகையில் உள்ளது. சீனா, வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளுடன் இந்த மாநிலங்கள் எல்லையை பகிா்ந்துகொண்டுள்ளன. இந்த எல்லைகள், நாட்டின் மிக முக்கிய பகுதிகளாகும்.

குடியுரிமை சட்டத்தால், மேற்கண்ட மாநிலங்களில் மக்களிடையே அச்சமும், குழப்பமான சூழலும் ஏற்பட்டுள்ளது. தங்களது கலாசாரம், மொழி, சமூக கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கருதுகின்றனா். மாநிலங்களின் பிரதிநிதியாக விளங்கும் மாநிலங்களவைக்கு, இந்த விவகாரத்தில் கூடுதல் பொறுப்புஉள்ளது. மக்களின் கவலைகள் குறித்து நாம் அமைதி காக்க முடியாது. ராணுவ நடவடிக்கையால் மட்டுமே தீா்வு கிடைத்துவிடாது. அரசியல் விவாதங்களும், ஆலோசனைகளும் அவசியம் என்றாா் ஆனந்த் சா்மா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT