முகப்பு
இந்தியா

அனைத்து பாகிஸ்தான் குடிமக்களுக்கும் குடியுரிமை என அறிவியுங்கள்: காங்கிரஸுக்கு பிரதமர் மோடி சவால்!

குடியுரிமை திருத்தச் சட்டம் எந்தவொரு இந்தியக் குடிமகனின் உரிமையையும் பறிக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:34 PM
கோப்புப்படம்
பகிர்:


குடியுரிமை திருத்தச் சட்டம் எந்தவொரு இந்தியக் குடிமகனின் உரிமையையும் பறிக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே தூண்டிவிடுவதாகக் குற்றம்சாட்டினார். இதுகுறித்து மேலும் பேசிய அவர்,

"குடியுரிமை திருத்தச் சட்டம் எந்தவொரு இந்தியக் குடிமகனின் உரிமையையும் பறிக்காது. யாருக்கும் தீங்கிழைக்காது. அரசியல் காரணங்களுக்காக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே முஸ்லிம்களை தூண்டிவிடுகின்றன. நீண்ட காலமாக பரிதாப நிலையில் இருப்பவர்களுக்குத்தான் இந்தச் சட்டம். மூன்று அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகும் மக்கள் இந்தியாவுக்கு வர வேண்டும். இது அவர்களுக்கானச் சட்டம். இதில் எந்த இடத்தில் இந்திய முஸ்லிம்களின் உரிமை மீறல் அல்லது வேறு ஏதேனும் ஒரு இந்தியரின் உரிமை மீறல் இருக்கிறது?

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு சவால் விடுக்கிறேன். அவர்களுக்கு தைரியம் இருந்தால் அனைத்து பாகிஸ்தானிய குடிமக்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கி, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கில் சட்டப்பிரிவு 370 திரும்ப கொண்டுவரப்படும் என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமது புனித நூலாகும். எனக்கு இளைஞர்களிடத்தில் ஒரு வேண்டுகோள் உள்ளது. கல்லூரிகளில் எங்களது கொள்கைகளை விவாதியுங்கள், ஜனநாயக முறையில் போராடுங்கள். நாங்கள் உங்கள் கருத்துக்கு செவி சாய்ப்போம்" என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →