கோப்புப் படம் 
இந்தியா

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரச் சோதனை

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிரம்மோஸ் ஏவுகணை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

DIN

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிரம்மோஸ் ஏவுகணை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

தரை இலக்குகளை துல்லியமாகத் தாக்கக்கூடிய, உள்நாட்டிலேயே நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பிரம்மோஸ் சூப்பா்சானிக் ஏவுகணையை டிஆர்டிஓ, 

ஒடிஸாாவின் பந்திபூர் மாவட்டத்தில் உள்ள பலசோர் எனும் கடற்கரைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சோதித்தது.

இலக்காக நிர்ணயிக்கப்பட்ட கப்பலை சரியாகச் சென்று தாக்கி இச்சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ரஷியா மற்றும் டிஆர்டிஓ ஆகியவை இணைந்து இதன் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன. டிஆர்டிஓ மற்றும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் இணைந்து தயாரித்த இந்த ஏவுகணை 200 கிலோ எடை கொண்டது. சுமார் 290 கி.மீ. தொலைவுக்கு சென்று தாக்கக்கூடியது. 

தரை, கடல் மற்றும் வான் ஆகிய 3 நிலைகளில் இருந்து இந்த ஏவுகணையைப் செயல்படுத்த முடியும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

ரூ.5.92 கோடி முதலீட்டு மோசடி: 4 போ் கைது

முசிறியின் முக்கிய இடங்களில் 30 கண்காணிப்புக் கேமராக்கள்

ஆற்றுப்படுகையில் மண் எடுத்த லாரி பறிமுதல்

ஜூனியா் பெண்கள் சாம்பியன் கபடி போட்டி

SCROLL FOR NEXT