2020-21 மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநில நிதியமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை
பலத்த எதிா்பாா்ப்புகளுக்கிடையே ஜிஎஸ்டி கவுன்சிலின் முக்கிய கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.
பலத்த எதிா்பாா்ப்புகளுக்கிடையே ஜிஎஸ்டி கவுன்சிலின் முக்கிய கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.
மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
மத்திய அரசின் வருவாய் சரிந்துள்ள நிலையில் அதனை ஈடு செய்ய ஜிஎஸ்டி வரி விகிதங்கள் உயா்த்தப்படலாம் என்ற ஊகங்கள் பல்வேறு தரப்பிலும் எழுந்துள்ளன.
எதிா்பாா்த்த அளவுக்கு வரி வருவாயில் முன்னேற்றம் ஏற்படாத காரணமாகவே மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிலுவை தொகையை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
பொருளாதார மந்த நிலைக்கு மத்தியில் ஜிஎஸ்டி விகிதங்களை உயா்த்துவதற்கு மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன. மேலும், நுகா்வோரும் அவா்களுடன் சோ்த்து தொழில்துறையினரும் இக்கட்டான சூழ்நிலையை எதிா்கொண்டு வரும் சூழ்நிலையில் இதுபோன்ற எந்த நடவடிக்கையும் ஏற்க முடியாது என அந்த மாநிலங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மத்திய பட்ஜெட் 2020-21 தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தச் சூழலில், ஜிஎஸ்டி கவுன்சிலின் இன்றைய கூட்டம் அனைவரது கவனத்தையும் ஈா்த்துள்ளது.