நிர்பயா பாலியல் வன்கொடுமை குற்றவாாளியின் சீராய்வு மனு புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
நிர்பயா வழக்கில் மரண தண்டனையை உறுதிசெய்து 2017ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி குற்றவாளி அக்ஷய் குமார் சிங் அளித்த மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
இதையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.போபண்ணா அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தூக்கு தண்டனைக்கு எதிராக நிர்பயா பாலியல் வன்கொடுமை குற்றவாளி அக்ஷய் குமார் சிங் தாக்கல் செய்த இந்த சீராய்வு மனு மீதான விசாரணையை 3 பேர் அடங்கிய அமர்வு புதன்கிழமை மேற்கொண்டது.
இந்நிலையில், குற்றவாளி அக்ஷய் குமார் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து புதன்கிழமை உத்தரவிட்டது. இதன்மூலம் அவரது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.