இந்தியா

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வலியுறுத்திய மன்மோகன்சிங்: விடியோ வெளியிட்டது பாஜக

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடி வரும் காங்கிரஸ் கட்சி, இதேச் சட்டத்தை 2003ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியதாக பாஜக தெரிவித்துள்ளது.

DIN


புது தில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடி வரும் காங்கிரஸ் கட்சி, இதேச் சட்டத்தை 2003ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியதாக பாஜக தெரிவித்துள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வலியுறுத்தி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 2003ம் ஆண்டு மாநிலங்களவையில் பேசிய விடியோவையும் பாஜக வெளியிட்டுள்ளது.
 

பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது, 2003ம் ஆண்டு மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மன்மோகன் சிங், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை வலியுறுத்திப் பேசியுள்ளார் என்று கூறி, மாநிலங்களவையில் மன்மோகன் சிங் பேசிய விடியோவையும் இணைத்துள்ளது.

அந்த விடியோவில், குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டியதை வலியுறுத்தி மன்மோகன் சிங் பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

2003ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய காங்கிரஸ் கட்சி, தற்போது மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி போராட்டம் நடத்தி வருவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபிஃபா தரவரிசை: ஸ்பெயின் முதலிடம்..! 28 மாதங்களுக்குப் பின் கீழிறங்கிய ஆர்ஜென்டீனா!

கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீர் திறப்பு! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வாக்குத் திருட்டு இப்படித்தான் நடக்கிறது! - ராகுல் காந்தி

தில்லி கலவர வழக்கு: உமர் காலித் உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT