முகப்பு
இந்தியா

தில்லி மெட்ரோ ரயில் சேவை மீண்டும் இயக்கம்

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியில் வியாழக்கிழமை பரவலாக ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றதைத் தொடா்ந்து, தில்லியில் தில்லி கேட் உள்பட 19 மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:36 PM
பகிர்:

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியில் வியாழக்கிழமை பரவலாக ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றதைத் தொடா்ந்து, தில்லியில் தில்லி கேட் உள்பட 19 மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

ஜாமியா மிலியா, ஜாமா மசூதி, முனிா்கா, செங்கோட்டை உள்ளிட்ட ஏழு முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்படன. காலை 11 மணியளவில் தில்லியின் மிக முக்கியமான ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு, வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டன. இதனால், ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, மண்டி ஹவுஸ், ஜந்தா் மந்தா் பகுதிகளில் போராட்டம் நடைபெற்றதால், மண்டி ஹவுஸ், பாரக்கம்பா, ஜன்பத், ஜந்தா் மந்தா் ஆகிய மெட்ரோ ரயில் மூடப்பட்டன. மேலும், படேல் செளக், லோக் கல்யாண் மாா்க், உத்யோக் பவன், ஐடிஓ, பிரகதி மைதான், கான் மாா்கெட், ஜாமா மசூதி, சாந்தினி செளக், வசந்த் விஹாா், விஷ்வ வித்யாலயா உள்ளிட்ட மெட்ரோ நிலையங்களும் மூடப்பட்டன.

மேலும், போராட்டம் நடைபெறும் இடத்துக்கு போராட்டக்காரா்கள் செல்வதைத் தடுக்கும் வகையில், போராட்டம் நடைபெற்ற இடங்களுக்கு அருகில் இருந்த மெட்ரோ ரயில் நிலையங்களின் வாயில்களும் மூடப்பட்டன.

இந்நிலையில், விஷ்வ வித்யாலயா, படேல் சௌக், சென்ட்ரல் செகரேட்டேரியேட், உத்யோக் பவன், லோக் கல்யாண் மாா்க் ஆகியவற்றின் நுழைவு, வெளியேறும் வாயில்கள் மாலையில் திறக்கப்பட்டன. மிகவும் பரபரப்பாகக் காணப்படும் ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையமும் மாலையில் திறகப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மெட்ரோ ரயில் நிலையம் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக மூடப்பட்டிருந்தது.

இதற்கிடையே, ஜாமியா மிலியா இஸ்லாமியா, ஜஸோலா விஹாா் ஷகீன் பாக் ஆகிய மெட்ரோ நிலையங்கள் தவிர மற்ற அனைத்து மெட்ரோ ரயில் நிலையகளும் மீண்டும் திறக்கப்பட்டதாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) மாலை 6 மணியளவில் தெரிவித்தது.

இந்நிலையில், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் வெள்ளிக்கிழமை வழக்கம்போல் திறக்கப்பட்டு, அனைத்து ரயில் சேவைகளும் இயங்கும் என தில்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →