இந்தியா

ராம்பூரில் வன்முறை: போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

DIN


உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் ஒருவர் பலியானார்.

போராட்டக்காரர்கள், சாலைகளில் இருந்த வாகனங்களுக்கு தீ வைத்ததால், சம்பவ இடத்தில் பதற்றம் ஏற்பட்டது. ராம்பூரில் நடைபெற்ற வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டார். ஏராளமானோர் காயமடைந்தனர்.

இதனால், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி காவல்துறையினர், போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் நடந்த வன்முறை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வா வாத்தியார் அவர்களுக்கான படம் கிடையாது... நலன் குமாரசாமி!

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

ஜன நாயகனுக்காக காத்திருந்தேன்! பராசக்திக்கு வாழ்த்துகள்! அண்ணாமலை பேட்டி! | BJP

”விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறோமா?” பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் | TVK | BJP

திருவனந்தபுரம்: திருமண நாளிலேயே சாலை விபத்தில் இளைஞர் பலி

SCROLL FOR NEXT