இந்தியா

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு விளக்கம்: பொதுக்கூட்டங்கள் நடத்த பாஜக திட்டம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டம் மற்றும் பிரசாரங்களை முறியடிக்கும்

DIN



புதுதில்லி:  குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டம் மற்றும் பிரசாரங்களை முறியடிக்கும் வகையில், பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், பொதுக்கூட்டம், பேரணிகள் நடத்த பாஜக முடிவு செய்துள்ளதாக பாஜக பொதுச்செயலாளர் பூபேந்தர் யாதவ் கூறியுள்ளார். 

தில்லியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பத்து நாட்களுக்குள் பாஜகவினர் 3 கோடி குடும்பங்களை சந்திக்கவும், நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்ட இடங்களிளில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்துவது மற்றும் 100க்கும் மேற்பட்ட சிறப்பு பொதுக்கூட்டங்களை நடத்துவது என திட்டமிட்டுள்ளதாக கூறினார்.  

மேலும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வன்முறையை ஆதரிக்கிறார்களா என்று கேள்வி எழுப்பியவர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கும், தேசிய குடிமக்கள் பதிவிற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. இரண்டும் வேறுபட்டவை என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT