ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியின் 47வது பிறந்ததினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, டிவிட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இவரது பிறந்தநாளை முன்னிட்டு, "பிறந்தநாள் வாழ்த்துகள் ஜெகன்மோகன் ரெட்டி, ஆரோக்கியத்துடன், நீண்ட நாட்கள் வாழ பிரார்த்திக்கிறேன்" என்று மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதேப்போல, திமுக தலைவர் ஸ்டாலினும், ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். ஆந்திர மக்களுக்கும், நாட்டுக்கும் பல ஆண்டுகள் நீங்கள் சேவை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.