பாதுகாப்புத் தீவிரம்: தில்லியில் நிலைமை சீரடைந்து வருகிறது
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், தில்லி முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால், இன்று நிலைமை ஓரளவுக்கு சீரடைந்து வருகிறது.
புது தில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், தில்லி முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால், இன்று நிலைமை ஓரளவுக்கு சீரடைந்து வருகிறது.
வெள்ளிக்கிழமை பழைய தில்லியின் தர்யாகஞ்ச் மற்றும் சீமாபூர் பகுதிகளில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல கடைகள் திறக்கப்பட்டன. காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதால் இன்று ஓரளவுக்கு தில்லியில் நிலைமை சீரடைந்துள்ளது.
ஷஹ்தாரா மாவட்ட காவல்துறை அதிகாரி கூறுகையில், இன்று நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த சம்பவங்களுக்கும் இடம் அளிக்காத வகையில், தில்லியின் பல பகுதிகளில் நேற்று மாலை பாதுகாப்புப் படையினர் கொடியணிவகுப்பை நடத்தியது குறிப்பிடத்தக்கது.