ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானி 2019 ஆம் ஆண்டில் தனது சொத்தின் நிகர மதிப்பை 1,700 கோடி டாலராக அதிகரித்துள்ளார்.
ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவருமான முகேஷ் அம்பானி இந்தியாவின் முதல் செல்வந்தராக உள்ளார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட போர்ப்ஸ் பத்திரிகையின் உலக செல்வந்தர்களின் பட்டியலின்படி, முகேஷ் அம்பானி உலக செல்வந்தர்களில் 9-வது செல்வந்தராக முன்னேறி உள்ளார்.
இந்நிலையில், நடப்பு ஆண்டில் டிசம்பர் 23 ஆம் தேதி நிலவரப்படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 1,700 கோடி டாலராக (சுமார் ரூ.1.20 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் மூலம் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரது மொத்த நிகர சொத்து மதிப்பு 6.08 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
புளூம்பெர்க் பட்டியலின்படி அலிபாபா குழும நிறுவனர் ஜேக் மாவின் நிகர சொத்து மதிப்பு 1,130 கோடி டாலர் அதிகரித்து இருக்கிறது. ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு 1,320 கோடி டாலர் அதிகரித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் எரிசக்தி மற்றும் தொலைத் தொடர்பு வர்த்தகம் சிறப்பாக செயல்பட்டதால் 11.3 பில்லியன் டாலர்களைச் சேர்க்க முடிந்தது. ஆர்ஐஎல் பங்குகளில் 40 சதவீதம் உயர்ந்துள்ளதால் இந்த ஆண்டு அம்பானிக்கு அதிர்ஷ்டமான ஆண்டாகவே அமைந்துள்ளது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
ஆர்ஐஎல் பங்கின் விலை 40 சதவீதம் உயர்ந்து இருப்பதே முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு உயர்வு, துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ கட்டண விகிதங்களை உயர்த்தி இருப்பதே இந்த உயர்வுக்கு முக்கிய காரணம்.
ஆர்ஐஎல் முதலீட்டாளர்கள் அடுத்த நான்கு ஆண்டுகளில் நிறுவனத்தில் தங்கள் பங்குதாரர்களின் மதிப்பை இரட்டிப்பாகக் காணலாம் என்று முதலீட்டு அதிகாரி லோகாப்ரியா ப்ளூம்பெர்க்கிடம் கூறியுள்ளார்.
மேலும், தற்போதுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வணிகத்தைத் தவிர தொலைத் தொடர்பு மற்றும் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதன் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முழுமையான மாற்றத்துடன் கூடிய முன்னேற்த்தை கண்டுள்ளது. ரிலையன்ஸ் புதிய தொழில்களில் இறங்கி வருவதாலும், சமீபத்திய தொலைதொடர்பு வணிகம் உள்பட ஏற்கெனவே உள்ளவற்றை பலப்படுத்தி வருவதாலும் பல புதிய முதலீட்டாளர்கள் திரண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, ஆர்ஐஎல் நிறுவனத்தின் புதிய முயற்சிகள் அடுத்த சில ஆண்டுகளில் ரிலையன்ஸ் வருவாயில் 50 சதவீத பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் பங்குச் சந்தையில் விரைவாக அதிகரிக்க உதவிய மற்றொரு காரணி, நிறுவனத்தின் நிகரக் கடனை பூஜ்ஜியத்திற்குக் கொண்டுவருவதற்கான அம்பானியின் திட்டம்.
62 வயதான முகேஷ் அம்பானி 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குழுவின் நிகரக் கடனை பூஜ்ஜியமாகக் குறைக்கும் திட்டங்களை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் முன்னணி 10 இந்திய நிறுவனங்கள் பட்டியலில் முதலிடத்தில் ஆர்ஐஎல் உள்ளது. நேற்றைய நிலவரப்படி அதன் மதிப்பு சுமார் ரூ.9.80 லட்சம் கோடியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.