இந்தியா

சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாததால் பிரதமர் மோடி ஏமாற்றம்

ANI

புது தில்லி: தில்லியில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், நேரடியாக சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாமல் பிரதமர் நரேந்திர மோடி ஏமாற்றம் அடைந்தார்.

சூரிய கண்ணாடியுடன், சூரிய கிரகணத்தைப் பார்க்க ஆவலோடு இருந்த பிரதமர் நரேந்திர மோடி, சூரிய கிரகணம் நிகழ்ந்தபோது, வானில் மேகமூட்டம் காணப்பட்டதால், நேரிடையாகப் பார்க்க முடியாமல் வருத்தம் அடைந்தார்.

இது பற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நாட்டு மக்களைப் போன்றே நானும் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தைப் பார்க்க ஆவலோடு இருந்தேன், மேகமூட்டம் காரணமாக சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாமல் போனது, ஆனால், கோழிக்கோடு உள்ளிட்ட இடங்களில் தெரிந்த நெருப்புவளைய சூரியகிரகணத்தை நேரலையில் பார்த்தேன். மேலும், நிபுணர்களுடன் உரையாடி சூரிய கிரகணத்தைப் பற்றி தெரிந்து கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT