இந்தியா

மகாராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம்: துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்பு

DIN

மகாராஷ்டிர துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் திங்கள்கிழமை பதவியேற்றார்.

மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசின் அமைச்சரவை திங்கள்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவாருடன் 36 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷரத் பவாரின் சகோதரரின் மகனான அஜித் பவார், மகாராஷ்டிர துணை முதல்வராக பதவியேற்றார். உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே, காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான், அமித் தேஷ்முக் மற்றும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

கடந்த நவம்பர் மாதம் பாஜக தலைமையில் தேவேந்திர ஃபட்னவீஸ் மகாராஷ்டிர முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால், 80 மணி நேரத்தில், பாஜக - என்சிபி ஆட்சியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டு, முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் தங்களது பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT