இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் மீது வழக்கு தொடர சிபிஐக்கு அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் மீது வழக்கு தொடர சிபிஐக்கு சட்ட

DIN


புதுதில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் மீது வழக்கு தொடர சிபிஐக்கு சட்ட அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த 2007ஆம் ஆண்டில் மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியின்போது, மத்திய நிதியமைச்சராக இருந்தார் ப. சிதம்பரம். அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா  நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ வழக்கை அடிப்படையாகக் கொண்டு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ரூ.10 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கூறி சிபிஐ கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவரைக் கைது செய்தது. பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். 

இந்த வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, அரசு ஊழியர் மீது ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் பட்சத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கும் முன்பாக சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்பு மத்திய அரசின் ஒப்புதலை பெற வேண்டியது அவசியமாகும்.

அதன்படி, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசு ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், தற்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கிலும் ப.சிதம்பரத்துக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ள கடந்த மாதம் மத்திய அரசின் ஒப்புதலை சிபிஐ கோரியிருந்தது. 

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கைகள் மோற்கொள்ள சட்ட அமைச்சகம் சிபிஐக்கு அனுமதி அளித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று!

இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

நாடாளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு

கூட்டுறவு வங்கியில் உதவியாளா் காலிப் பணியிட எண்ணிக்கை குறைப்பு

திருவண்ணாமலை: மலையைச் சுற்றியுள்ள 554 ஏக்கரை பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும்

SCROLL FOR NEXT