இந்தியா

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 3 தங்கக் கிரீடங்கள் திடீர் மாயம் 

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 3 தங்கக் கிரீடங்கள் திடீரென மாயமாகியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

DIN

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 3 தங்கக் கிரீடங்கள் திடீரென மாயமாகியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமானது கோவிந்தராஜ சுவாமி கோயில். இந்தக்  கோயிலின் உற்சவ மூர்த்தியை அலங்கரிக்கும் 3 தங்கக் கிரீடங்கள் மாயமானது கோயில் அர்ச்சகர்கள் மூலம் சனிக்கிழமை இரவு தெரிய வந்தது. இதனையடுத்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அதிகாரிகள் மற்றும் போலீசார் கோயில் கதவுகளை அடைத்து நள்ளிரவு முதல் விசாரணையை தொடங்கினர். பணியில் இருந்த அர்ச்சகர்கள், ஊழியர்களை கோவிலுக்கு மீண்டும் வரவழைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்காக ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும், அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது பக்தர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கத் தேரழகு... துஷாரா விஜயன்!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

மஞ்சலோக மேனி... கெளரி கிஷன்!

பெங்காலி திரைப்பட ஒளிப்பதிவாளர் வீட்டில் சடலமாக கண்டெடுப்பு

நெல்லையில் கனமழை: உதவி எண்கள் அறிவிப்பு!

SCROLL FOR NEXT